'யூ டூ கர்நாடகா'- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ட்வீட்!

Last Modified : 15 May, 2018 06:50 pm

கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி நிலவரம் தெரிந்த நிலையில், 'யூ டூ கர்நாடகா!' என்று குறிப்பிட்டு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார். 

கர்நாடக தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு சுமார் 10 மணியளவில் முடிவுகள் கணிக்க முடிந்தன. அதனைத் தொடர்ந்து தலைவர்கள் பலரும் பாஜக தலைமைக்கும் தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை கூற ஆரம்பித்தனர். இந்த நிலையில் காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா, "யூ டூ கர்நாடகா" என ட்வீட் செய்தார். 

பாஜக ஆட்சி அமைக்கும் மாநில வரிசையில் கர்நாடகாவும் சேர்ந்துவிட்டதாக , ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் அப்படி ஒரு ட்வீட்டை பதிந்திருந்தார்.

'யூ டூ ப்ரூட்டஸ்' என்பது ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகத்தில், ப்ரூட்டஸை நோக்கி, 'யூ டூ ப்ரூட்டஸ்' என்று கூறியவாறு சீஸர் தாக்குதலுக்கு உள்ளாகி பதில் தாக்குதல் நடத்தாமல் இறந்துபோவார். 

காஷ்மீரில் பிடிபி - பாஜக கூட்டணியிடம் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதை குறிப்பிடும் வகையில், ஒமர் அப்துல்லா இவ்வாறு ட்வீட் செய்திருக்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close