பா.ஜ.க-வுக்கு தாவ 15 எம்.எல்.ஏ.க்கள் ரெடி... கர்நாடகாவின் கூவத்தூர் மொமண்ட்!

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 09:33 pm


காங்கிரஸ் பக்கமுள்ள 15 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க-வின் பின் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் தருவாயில் உள்ளது. தேர்தல் முடிவுகள் 90 சதவீதத்திற்கு மேல் வெளியாகியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டு முன்னணி கட்சிக்குமே ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை இல்லாத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் மன்றாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு கோரியது. இதற்கு ம.ஜ.த கட்சியும் ஒப்புகொண்டது. இதையடுத்து இரண்டு கட்சிகளும் இணைந்து கர்நாடக மாநில ஆளுநர் வாஜூபாயை சந்தித்தனர். இந்நிலையில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க உரிமை கோரி எடியூரப்பாவும் ஆளுநரை சந்தித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 7 நாட்கள் அவகாசம் அளித்தார்.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க குழப்பம் நீடித்துவரும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டியை விட சுவாரஸ்ய த்ரில்லிங்குடன் சென்றுகொண்டிருக்கும் கர்நாடக தேர்தல் முடிவுகளில் யார் ஆட்சியை அமைப்பது என்பது ஆளுநரின் கையில் தான் உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜக கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 9 பேர் மஜக கட்சியையும், 6 பேர் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 15 பேர் பா.ஜ.கவின் பின் சென்றால் காங்கிரஸின் ஆட்சி கனவு முடிந்தது. எனவே எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை ஆந்திரா அல்லது பஞ்சாப்பிலுள்ள விடுதிக்கு அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close