பாலம் இடிந்து விழுந்து 12 பேர் உடல் நசுங்கி பலி

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 08:48 pm


வாரணாசியில் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்து 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் பாலத்தின் இடையே சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரணாசியின் கண்டோமென்ட் ரயில்வே ஸ்டேஷன் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுவந்தனர். அதன் அருகே சுமார் 20 வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இன்று மாலை கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென மேம்பாலம் சரிந்து விழுந்தது. 


12 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் பாலத்தின் இடையே சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த கோரவிபத்தை தொடர்ந்து மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close