சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை கூகுளிலேயே பார்க்கலாம்!

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 10:22 pm


இந்த ஆண்டின் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை, கூகுலிலேயே பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதாக தெரிந்து கொள்ளும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எப்போதுமே சிபிஎஸ்இ-யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது எண்களை பதிவு செய்து பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் பலர் பார்ப்பதாலும், இணையதளத்தை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போவதாலும் பலர் கஷ்டப்படுவதுண்டு.

எனவே இந்த ஆண்டு, தேர்வு முடிவுகள் பார்ப்பதை எளிதாக்க, கூகுளுடன் கூட்டணி வைத்துள்ளது சிபிஎஸ்இ. கூகுள் இணையத்திற்கு சென்று, CBSE Class 10 result அல்லது CBSE Class 12 result என தேடினால் போதும். மாணவர்கள் தங்களது விவரங்களை கூகுள் மூலமாகவே பதிவு செய்து, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close