"எங்ககிட்ட நல்ல ரிசார்ட் இருக்கு!" கர்நாடக எம்.எல்.ஏ.க்களுக்கு கேரள சுற்றுலாத்துறை 'நக்கல்' அழைப்பு

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 05:08 am


கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தலும் ஆட்சியமைக்க முடியவில்லை. மதசார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க முடிவெடுத்துள்ளது. 

ஆளுநரை சந்தித்து, இரு தரப்பினரும் ஆட்சியமைக்க உரிமை கோரினர். தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க, தனது பெரும்பான்மையை நிரூபிக்க, 1 வார கால அவகாசம் கொடுத்துள்ளார் ஆளுநர். எதிர்தரப்பு எம்.எல்.ஏ-க்களை தங்கள் வசம் இழுக்க, இரு கட்சியினரும் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில், கேரள சுற்றுலாத்துறை இந்த களேபரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. 

சில வருடங்களுக்கு முன், உட்கட்சி பூசலுக்கு நடுவே, அப்போதைய முதல்வர் எடியூரப்பா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சொகுசு ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றார். தமிழகத்தில் சசிகலா - ஓபிஎஸ் தரப்புக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட போது, கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் வைக்கப்பட்டனர். அதேபோல இந்த முறை, தங்களது எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் கண்காணிப்பில் வைக்க காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், கேரளா சுற்றுலாத்துறை, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடும் போட்டிக்கு பின், கர்நாடக தேர்தல் முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் கேரளாவில் உள்ள பாதுகாப்பான, அழகான ரிசார்ட்டுக்கு வந்து ஓய்வெடுக்க அழைப்பு விடுக்கிறோம்" என எழுதப்பட்டிருந்தது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close