கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, அமித்ஷா...

  Sujatha   | Last Modified : 16 May, 2018 06:56 am


கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக தனி பெரும் கட்சியாக அதிக இடங்களை பாஜக பெற்றுள்ளதற்காக, கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நடைப்பெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலின், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. சுவாரசியமாக தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையில், பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், ஜ.த(ம) கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது. மேலும் பாஜக கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் எடியூரப்பாவுக்கு 7 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். 

இந்நிலையில், பாஜக கட்சிக்கு ஓட்டளித்த கர்நாடக மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் அக்கட்சி தலைவர் அமித்ஷா தங்களது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளனர்.

மோடியின் பதிவு:  பாரதிய ஜனதாவின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்த கர்நாடக மாநில சகோதர, சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் நேரம், காலம் பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களால் தனி பெரும் கட்சியாக அதிக இடங்களை பா.ஜனதா பெற்றுள்ளது. இதற்காக அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.   

அமித்ஷா பதிவு: வெற்றிக்காக உழைத்த ஒவ்வொரு தொண்டர்களுக்கும், ஸ்ரீ எடியூரப்பா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களால் தான் தனி பெரும் கட்சியாக அதிக இடங்களை பா.ஜனதா பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களை போலவே, மோடியின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள கர்நாடக மக்களுக்கு நன்றி. இந்த தேர்தல் முடிவு, கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் மேல் உள்ள வெறுப்பை காட்டுகிறது.  இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.                      

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close