• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

கர்ப்பத்தடை சாதனங்களை பரிசாக கொடுக்கும் உ.பி அரசு!

  கனிமொழி   | Last Modified : 16 May, 2018 04:56 pm


2016-ல் நடந்த கணகெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 132.42 கோடி. இதில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலம் உத்திர பிரதேசம். 2012-லேயே அங்கு 20.42 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்கிறது கணக்கெடுப்பு. அப்படியென்றால் இப்போது? சொல்லவே வேண்டாம்...

இந்த மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்க உத்திர பிரதேச அரசு ஒரு புது யுக்தியைக் கையில் எடுத்திருக்கிறது. அது என்ன தெரியுமா? 

தற்போது திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதனால், திருமணத்தை பதிவு செய்ய வரும் புதிதாக திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதிகளுக்கு ஒரு 'கிஃப்ட்'டினைப் பரிசளிக்கிறது உ.பி அரசு. அதில் திருமண பதிவுச் சான்றிதழ், கர்ப்பத் தடை சாதனங்கள், மற்றும் மாத்திரைகள், இவற்றுடன் சீப்பு, பொட்டு, டவல் மற்றும் தினசரி உபயோகப் பொருட்கள் இருக்கிறது. 

'நேஷனல் ஹெல்த் மிஷன்' சார்பில் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள் மூலம் இந்த பரிசுகள், உ.பி தம்பதிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்கள் தொகை விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அலகாபாத் உட்பட உத்திர பிரதேசத்தின் 57 மாவட்டங்களில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. 

யோகி ஆதித்யநாத் அரசின் இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாமே...

Advertisement:
[X] Close