ரூ.100 கோடி பேரம் என்பதெல்லாம் கட்டுக்கதை: பிரகாஷ் ஜவடேகர்

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 02:33 pm

மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களுக்கு பா.ஜ.க ரூ.100 கோடி கொடுக்க பேரம் பேசுவதாக குமாரசாமி கூறுவது கட்டுக்கதை என்று பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். 

பெங்களூருவில் நடந்த மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தங்கள் எம்.எல்.ஏக்களிடம் ரூ.100 கோடி தருவதாக பா.ஜ.க பேரம் பேசுகிறது என குற்றம் சாட்டினார். 

இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, ''காங்கிரசும், ம.ஜ.த-வும் ஜனநாயகத்திற்கு எதிராக ஒன்றிணைகிறார்கள். பா.ஜ.க குதிரை பேரம் செய்யவில்லை. ரூ.100 கோடி பேரம் என்று குமாரசாமி கூறுவது எல்லாம் கட்டுக்கதை'' என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.டி.ராஜேகவுடா கூறும்போது, பா.ஜ.கவிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வருகிறது. அவர்களிடம் போன் செய்ய வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து அழைக்கின்றனர். அவர்கள் வேலையே இது தான் என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close