பா.ஜ.கவை அழைத்தால் ராஜ்பவன் முன்பாக தர்ணா போராட்டம்: காங்கிரஸ் - ம.ஜ.த எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 04:24 pm


கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் எடியூரப்பாவை அழைத்தால் நாளை ராஜ்பவன் முன்பாக காங்கிரஸ் - ம.ஜ.த சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களில் பா.ஜ.க 104 இடங்களையே கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மை இல்லையெனினும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, நேற்று மாலை ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து இன்றும் அவரை நேரில் சந்தித்து எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அளித்துள்ளார். தன்னை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதாக உறுதி அளித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் கூட்டணியில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் - ம.ஜ.த மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களிடம் பெரும்பான்மை இருந்தும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. மேலும் ஆளுநரிடம் இருந்து தங்களுக்கு எந்த பதிலும் சரியாக வரவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் - ம.ஜ.த கட்சியினர் மீண்டும்  ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

மேலும், நாளை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும், அதற்கு பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் வருமாறும் வாட்ஸ்ஆப்-பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஆளுநர் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை அழைத்தால் நாளை ராஜ்பவன் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் - ம.ஜ.த சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close