கர்நாடக தேர்தல்: 29 இடங்களில் டெபாசிட்டை இழந்த பாஜக

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 11:00 pm


கர்நாடக பேரவை தேர்தலில்104 இடங்களில் பாஜக வென்றுள்ளது. மேலும் 29 தொகுதிகளில் டெபாசிட்  இழந்துள்ளது. 

கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் கட்சி அதிகமாகவே வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவிற்கு 36.7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 38 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. மதச் சார்பற்ற ஜனதா தளம் 17.7 சதவீத வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. இருப்பினும் காங்கிரஸால் முன்னிலை வரமுடியிவில்லை. 

இந்நிலையில் காங்கிரஸ்- மஜதவுடன் கூட்டணி அமைத்து புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகவும், விரைவில் ஆட்சியமைக்க அழைக்குமாறும், பாஜக ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆட்சி அரியணை கேட்கும் பாஜக பேகபல்லி, பத்ராவதி, சிக்கபல்லாபூர், சிந்தாமணி, தேவனஹள்ளி, குர்மித்கல், ஹளேநரசிப்புரா, டி.நரசிப்புரா, ஹூன்சூர், கனகபுரா, கோலார், கொரட்டகெரே, கிருஷ்ணராஜநகர், கிருஷ்ணராஜபேட்டை, மத்தூர், மதுகிரி, மகாதி, மலவள்ளி, மேல்கோட்டை, முல்பாகல், நாகமங்களா, பாவகடா, பெரியபட்டணா, புலிகேசிநகர், ராமநகரம், சரவணபெலகோலா, ஸ்ரீரங்கப்பட்டணா, சித்லஹட்டா, ஸ்ரீனிவாசபுரா ஆகிய 29தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இத்தொகுதிகளில் மிக குறைந்த வாக்குகள் 1915வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.