நாளை பதவியேற்கிறார் எடியூரப்பா!

Last Modified : 17 May, 2018 02:33 am


கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா 104 இடங்களை வென்றுள்ள நிலையில், ஆளுநர், அக்கட்சித் தலைவர் எடியூரப்பாவை பதவியேற்க நாளை அழைத்துள்ளதார்.

கர்நாடக பா.ஜ எம்.எல்.ஏ சுரேஷ் குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் நாளை எடியூரப்பாவை பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். இதைத் தொடர்ந்து பா.ஜ தேசிய செயலாளர் எச் ராஜாவும் தனது சமூக வலைதளத்தில் இதை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தற்போது எடியூரப்பா நாளை பதவியேற்பதாக பாரதிய ஜனதா கட்சி உறுதி செய்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சேர்ந்து, 115 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், குறைந்த சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பா.ஜ-வை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைத்திருந்தால் அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தங்களது எம்.எல்.ஏ-க்கள் அணி தாவக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி, அவர்கள் ஈகிள்டன் ரிசார்ட்டில் வைத்துள்ளது. தங்களது எம்.எல்.ஏ-க்களை வாங்க, பா.ஜ தரப்பில் 100 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியதாக, மஜத கட்சியின் தலைவர் குமாரசுவாமி குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நாளை  காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பெரும்பான்மையை நிரூபிக்க, எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close