ரமலானை முன்னிட்டு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்!

Last Modified : 17 May, 2018 09:37 am


புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில், ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம், என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ரமலான் பிறை நேற்று தெரிந்ததை தொடர்ந்து, இன்று முதல் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், ரமலான் நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்த தருணத்தில், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில், அதிரடி நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என ராணுவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு, ராணுவத்தினர் இடையூறாக இருக்க வேண்டாம் என்ற நோக்கோடு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியிடம் தெரிவித்துள்ளார்.

நோன்பு சமயத்தில், ராணுவம் ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அதை தீவிரவாதிகள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி பொதுமக்கள் மனதை கலைக்கக் கூடும் என உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இந்த நேரத்தில், ராணுவத்தினர் வழக்கம் போல விழிப்பாக செயல்படுவார்கள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close