கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 10:17 am

பரபரப்பான சூழ்நிலையில் பா.ஜ.க.வின் எடியூரப்பா இன்று கர்நாடகாவின் 23வது முதல்வராக பதிவியேற்றார். 

கர்நாடகாவில் மே 15ந்தேதி வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இந்நிலையில் தனி பெரும் கட்சியான எங்களை தான் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று பா.ஜ.க தரப்பிலும், கூட்டணியாக பெரும்பான்மை பெற்றுள்ளோம் என்று மஜத-காங்கிரஸ் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க நேற்று ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை எதிர்த்து மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனு நள்ளிரவு 2 மணியளவில் விசாரணைக்கு வந்தது. 3 மணி நேரம் நீண்ட இந்த விசாரணைக்கு பிறகு கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்பதற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும் பதவியேற்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் தான் கொடுத்த கடிதத்தின் நகலை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இன்று எடியூரப்பா பதிவியேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நேற்று இரவு முதல் ராஜ்பவனில் விறுவிறுப்பாக நடைபெற்றது. எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனையடுத்து காலை 9 மணியளவில் ஆளநர் தலைமையில் எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வராக பதியேற்பது இது 3வது முறையாகும். 

இந்த நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா, தேவேந்திர பிரதாப், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close