எடியூரப்பா தலைவிதியை கடிதம் தீர்மானிக்கும்: பா.சிதம்பரம்

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 06:20 pm

எடியூரப்பாவின் தலைவிதியை அவர் ஆளுநருக்கு கொடுத்த கடிதம் தீர்மானிக்கும் என்று பா.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ்  முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 

3 மணிநேரம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை  எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க மாட்டேன். எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம்தான் தீர்மானிக்கும். 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவே எடியூரப்பா குறிப்பிட்டு இருப்பார். ஆளுநரின் அழைப்பு கடிதத்திலும் எடியூரப்பா எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை” என பதிவிட்டுள்ளார். 

முன்னதாக ''15 நாள் அவகாசம்: 104 என்பதை 111 ஆக மாற்ற திரு எட்டியூரப்பாவிற்கு அழைப்பு. இது உயர் கணிதம்'' என்றும், ''கர்நாடக ஆளுநர் திரு எட்டியூரப்பாவிற்கு அழைப்பு: 15 நாட்களில் சிறுபான்மையை பெரும்பான்மையாக மாற்றிக் காட்டுங்கள். இது புதிய ரசவாதம்'' என்றும் அவர் பதிவிட்டிருந்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close