இந்தியாவில் தூய்மையான நகரம் இந்தூர்

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 07:51 pm

இந்தியாவில் தூய்மையான நகராமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் தூய்மையாக இருக்கும் நகரங்கள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டன. இதன் முடிவுகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று வெளியிட்டுள்ளார். 

அந்த பட்டியலில் இந்தூர், போபால், சண்டிகர் ஆகியவை தூய்மையான நகரங்கள் என கூறப்பட்டுள்ளது. நகராட்சிகளின் பட்டியலில் மூன்று லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் புது டெல்லி நகராட்சி கவுன்சில் முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் மாநில தலைநகரங்களின் பட்டியலில் கிரேட்டர் மும்பை முதலிடம் வகிக்கிறது. 

ஆய்வறிக்கையின் படி, பெரு நகரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட விஜயவாடா முதலிடத்தில் உள்ளது. தூய்மை நகரங்களின் பட்டியலில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட மைசூரு நுழைந்துள்ளது. 

ஸ்வச் சர்வேக்‌ஷன் மூலம் நாடு முழுவதும் 4,203 நகராட்சிகளைச் சேர்ந்த 37.66 லட்சம் குடிமக்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். கடந்த 2017ல், ஒரு லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக மக்கள் தொகை கொண்ட 434 நகராட்சிகள் மட்டும் தூய்மை குறித்த ஆய்வில் இடம்பெற்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close