அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கி விட்டனர்: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 01:59 pm

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது இந்திய அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றது குறித்து  தனது ட்விட்டர் பக்கத்தல் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,  ''பா.ஜ கவின் பகுத்தறிவற்ற வலியுறுத்தல் காரணமாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் இல்லாத போதும், பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ளது, அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.

மேலும் இன்று பா.ஜ.கவினர் கொண்டாடிய போது இந்தியாவின் ஜனநாயகம் தோல்வியடைந்து விட்டது'' என்று பதிவிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close