சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தது தான் ஜனநாயக படுகொலை: அமித்ஷா

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 02:51 pm

கர்நாடகாவில் காங்கிரஸ் சந்தர்ப்பாவாத கூட்டணி அமைத்த போது தான் ஜனநாயக படுகொலை நடந்ததாக ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். 

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான தனிபெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்த ஆளுநர் வஜுபாய் வாலா, 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். அதன்படி இன்று எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார். 

இந்நிலையில் கர்நாடகாவில் நடந்தது ஜனநாயக படுகொலை என ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா பதிவிட்டுள்ளார். 

அதில் "காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் வகையில் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்த நிமிடமே ஜனநாயகத்தி படுகொலை நிகழ்ந்துவிட்டது. கர்நாடகாவின் நலன் சார்ந்ததாக அல்லாமல் தங்களது குறுகிய அரசியல் லாபத்திற்கான இந்த கூட்டணி அவமானகரமானது. 104 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிப்பெற்றுள்ளது. ஆனால் 78 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், 37 இடங்களில் மட்டுமே வென் என அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close