அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான படுகொலை தொடங்கிவிட்டது - நடிகர் பிரகாஷ் ராஜ்

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 02:37 pm


கர்நாடகாவில் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான படுகொலை தொடங்கிவிட்டது என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் அரசியல் சூழ்நிலையில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசியலமைப்பு சாசனம் மீதான என்கவுண்டர் தொடங்கியுள்ளது. மக்களிடம் இது குறித்து எந்த கொந்தளிப்பும் இல்லை. எந்த கட்சியில் இருந்து எந்த கட்சிக்கு தாவுகிறார்கள், யாரெல்லாம் எங்கெங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்? என பரபரப்பான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அரசியல் சாணக்கியர்களின் திறமையை சந்தோஷமாக பார்த்து வருகிறேன். 

மக்கள் இப்போதும் விழித்துக்கொள்ளாவிட்டால் நாம் வீழ்ந்துகொண்டே தான் இருப்போம். அரசியல்வாதிகளின் இந்த விளையாட்டை இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார். 

பா.ஜ.கவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும் பிரகாஷ் ராஜ், தற்போது #JustAsking என்ற ஹேஷ்டேக்கில் இதனை பதிவிட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close