பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு?

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 04:10 pm


இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.4ம், டீசல் விலை ரூ. 3.5ம் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகத் தேர்தல் காரணமாக 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் இருந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு ஏறத் தொடங்கியது. இதையடுத்து, இந்த நாட்களுக்கும் சேர்த்து பெட்ரோல், டீசல் விலை  அதிரடியாக உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 4 முதல் ரூ.4.55 வரையிலும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.3.5 முதல் ரூ.4 வரையிலும் அதிகரிக்க உள்ளது. 

மேலும், 'இந்த விலையேற்றத்திற்கு கர்நாடகத் தேர்தல் மட்டும் காரணமல்ல. ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக்கொண்டதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும், அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாலும் இந்த விலை ஏற்றம் அமல்படுத்தப்படும்' என மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close