மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்: திரிணமூல் அட்டகாச வெற்றி

Last Modified : 17 May, 2018 10:22 pm


மேற்கு வங்க மாநிலத்தின், கிராம பஞ்சாயத்து தேர்தலில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 80% இடங்களை வென்றுள்ளது.

பாரதிய ஜனதா, பெரும்பாலான இடங்களில் இரண்டாவது இடத்தை பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 9270 இடங்களை வெற்றி பெற்று, 2317 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

பாரதிய ஜனதா, 2079 இடங்களில் வெற்றி பெற்று மேலும், 200 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் இரண்டாவது பெரிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 562 பஞ்சாயத்து இடங்களை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் 315 இடங்களை வென்றுள்ளது.

அநேக இடங்களில் திரிணமூல் காங்கிரஸுக்கு கடும் போட்டி கொடுத்தது பாரதிய ஜனதா தான். பா.ஜ-வின் வளரும் ஆதிக்கத்தை இந்த தேர்தலில் பார்க்க முடிகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close