செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது தவறில்லை: கேரள ஐகோர்ட்!

  Sujatha   | Last Modified : 18 May, 2018 07:11 am


செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம்  இரு சக்கரவாகனத்திலோ அல்லது காரிலோ பயணிக்கும் போது ஓட்டுநர் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவதால் சாலைகளில் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீஸார், சாலை விதிமுறைகளை மீறி, வாகனம் ஓட்டுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தண்டனைகள் அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், கேரளா மாநிலம்  காக்கநாட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவர் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டி போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டின் ஒரு நீதிபதி அமர்வு, செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது. இதை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.ஷபிக், பி.சோமராஜன் ஆகியோரை கொண்ட அமர்வு, செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல எனக்கூறி ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை ரத்து செய்தனர்.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close