இந்தியாவில் பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்தது- பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 04:52 pm


இந்தியாவில் பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாகவும், கடுமையாக உழைக்கும் தலைவர்களை தேர்ந்தெடுப்பதை மக்கள் பின்பற்றுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் உறுப்பினர்களிடையே காணொளிக் காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, இப்போதைய ஆட்சியையும் முந்தைய ஆட்சிகளையும் மக்கள் வேறுபடுத்திப் பார்ப்பதாகவும், இந்த அரசின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்றும் கூறினார். மற்ற கட்சிகள் தங்களையும், குடும்பத்தையும் முன்னிலைப்படுத்தும் நிலையில், பாரதிய ஜனதாவுக்கு நாடும், மக்களுமே பிரதானம் என்று கூறிய மோடி, கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கட்சிக்கு உரமூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். 

கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராக இருந்து கட்சித் தலைவராக அமித் ஷா உயர்ந்துள்ளதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் பல்வேறு அணிகளிடம் பிரதமர் மோடி முதல்முறையாக உரையாற்றியது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியை தயார்ப்படுத்தும் தொடக்கமாக கருதப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close