எம்.எல்.ஏக்களின் விலை என்ன?- அமேசானிடம் கேட்ட இளைஞன்

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 08:59 am

அமேசானில் ம.ஜ.த எம்.எல்.ஏக்களின் விலை என்ன என்று இளைஞர் ஒருவர் அந்நிறுவனத்திடம் கேட்டுள்ளார். 

கர்நாடக தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எடியூரப்பாவை ஆளுநர் முதல்வர் பதவியை ஏற்க அழைத்தார். அதன் படி நேற்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், இன்னும் 15 நாட்களுக்கு பா.ஜ.க சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.கவிடம் 103 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அந்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 7 எம்.எல்.ஏக்கள் தேவை. 

இந்நிலையில் இளைஞர் ஒருவர் ட்விட்டரில் அமேசான் நிறுவனத்திடம் ''பா.ஜ.கவிக்கு பரிசளிக்க மதசார்பற்ற ஜனதா தளத்தில் 7 எம்.எல்.ஏக்கள் தேவை. நல்ல விலை சொல்லுங்கள்'' என்று கேட்டுள்ளார். இது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close