எடியூரப்பா ஆட்சியமைத்ததற்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 09:40 am

எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்- ம.ஜ.த தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது எடியூரப்பா ஆளுநரிடம் தான் வழங்கிய கடிதத்தை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கர்நாடக தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எஸ். பாப்தே, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு, 3 மணிநேரம் காரசார விவாதத்திற்கு பிறகு எடியூரப்பா பதவியேற்க தடையில்லை என உத்தரவிட்டனர். மேலும், மே 15ந்தேதி ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை இன்று காலை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா எழுதிய கடிதத்தில் எத்தனை ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையொப்பம் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து தெரிய வரும். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் வழங்கிய 15 நாள் அவகாசமும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close