காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 11:07 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை என்று தெரிகிறது.

காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தெரிவித்த திருத்தங்களை மேற்கொண்டு, திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.  இதில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நேற்று தெரிவிக்கப்ட்டது. 

இந்நிலையில் காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படாது என்று தெரிகிறது. உச்சநீதிமன்ற வழக்குகளின் பட்டியலில் காவிரி வழக்கு இல்லாததால் இன்று தீர்ப்பு வர வாய்ப்பில்லை. எனவே 22ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close