மோடி அரசின் விளம்பர செலவு... எந்த ஊடகம் எவ்வளவு வாங்கியது? - மாரிதாஸ்

Last Modified : 18 May, 2018 12:19 pm


"விளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.4,343 கோடி செலவு!" என்று செய்தி வெளியிட்ட தி இந்து, புதிய தலைமுறை, விகடன், நக்கீரன், NDTV, The indian express போன்ற செய்தி நிறுவனங்களுக்கு நான் (மாரிதாஸ்) வெகுஜன மக்கள் பிரதிநிதியாகக் கேட்க விரும்புவது இதுவே: 

உண்மை தான், செலவு செய்துள்ளார்கள்... ஆனால், மத்திய அரசின் மலிவு விலை மருந்துக் கடைகள் மூலம் மருந்து பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்துள்ளது மோடி அரசு. அதாவது மிகப் புரியும் படி கூறினால் Ciprofloxacin என்ற மாத்திரையின் விலை 55ரூபாய் என்றால் மத்திய அரசின் மருந்துக் கடையில் இது 13ரூபாய்க்குக் கிடைக்கும்.

காரணம் generic drugs. மாத்திரை கம்பெனி பெயர் எல்லாம் இல்லாமல் மருந்தின் பெயருடன் வெளியிடுவதால் விளம்பரம் செய்வது - மாத்திரை எழுதும் மருத்துவருக்குக் கமிஷன் கொடுப்பது - மருந்து விற்பனையாளர்களுக்கு என்று பலதரப்பட்ட இடங்களுக்குக் கமிஷன் கொடுக்க விலை 55ரூபாயாக உள்ளது. அதே மருந்தை அரசு தன் மருந்துக் கடைகளில் 13ரூபாய்க்குக் கொடுக்கக் காரணம் பிராண்ட் விளம்பரம் தேவை இல்லை - அந்தக் கமிஷன் எல்லாம் இல்லை. ஒரே வருடத்தில் 956 கடைகளைத் திறந்தனர். தனியார் பங்களிப்பும் வரவேற்றனர். 

இந்தத் திட்டம் சென்று மக்களிடம் சேர என்ன செய்ய வேண்டும் அரசு? 

காச நோய் முதல் கைகழுவி விட்டுச் சாப்பிட வேண்டும், பெண் குழந்தைகள் கல்வி என்பது வரை மக்களிடம் கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்? 

விளம்பரம் தானே செய்தாக வேண்டும். அரசு செயல்படுத்தும் பல நூறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேறு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் செய்யலாம். அதைப் பற்றி என்றாவது புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் இல்லை செந்தில் விவாதம் செய்யலாமே. அரசின் மக்கள் நலத் திட்டங்களை எப்படிக் கொண்டு சேர்ப்பது.. அரசுக்கு விளம்பர செலவு இல்லாமல்.... என்று விவாதம் நடத்தத் தயாரா? 

அது சரி அவ்வளவு யோக்கியவான்கள் இந்தப் பத்திரிகைகள் என்றால் நீங்கள் இது போல நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லக் காசு வாங்க மாட்டோம் என்று சொல்லலாமே. நலத் திட்டம் விவரங்கள் மக்களைச் சென்று சேர்க்க இது நாங்கள் செய்யும் உதவி என்று தினகரன், தி இந்து ஆரம்பித்து The Indian Express வரை உள்ள அச்சு ஊடகங்கள், ஆனந்த விகடன் போல வார இதழ்கள் எல்லாம் கொஞ்சம் முடிவு பண்ணுங்களேன்! பண்ண மாட்டீர்கள்... சரி தானே. 

எங்கே புதிய தலைமுறை கார்த்திகை செல்வன், தினத்தந்தி ஹரி, நியுஸ் 7 உங்கள் டீவியை வாயைத் திறந்து நாங்கள் அரசின் நலத் திட்டங்களை இலவசமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒளிபரப்பத் தயார் என்று கூற சொல்லுங்கள். அரசுக்கு விளம்பர செலவு மிச்சம். எங்கே வாயைத் திறக்க சொல்லுங்கள். 

நடிகர் விஜய் நடிப்பாரா இல்லை சிவகார்த்திகேயன் நடிப்பாரா விழிப்புணர்வு விளம்பரங்களில் இலவசமாக? 

போலியோ விழிப்புணர்வு முதல் கை கழுவிய பின் சாப்பிட வேண்டும் என்று ஒரு பொது நல விழிப்புணர்வு விளம்பரம் செய்ய உங்கள் டீ.வி-யில் மாதம் எவ்வளவு கேட்கிறீங்க? ஒரு சில நாட்கள் விளம்பரம் போடவே பல லட்சம் வேண்டும். 

அப்போது நாடு முழுவதும் டிவி-க்களில் காசநோய் விழிப்புணர்வு செய்ய ஒரு ஆளும் அரசு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அறிவுரை சொல்லுங்கள்? பொறுப்பும் பொதுநலனும் என்று வாய் கிழிய பேசும் மாஃபியா கும்பல் நடத்தும் நியுஸ் 7 நிறுவனம் - அரசின் விழிப்புணர்வு இது போலச் சில குறிப்பிட்ட விளம்பரங்களை அரசுக்கு இலவசமாகச் செய்ய வேண்டியது தானே. முடியாது தானே? அப்போ கேட்கவும் தகுதி கிடையாது. ஏன் என்றால் வாங்கித் தின்றது நீங்கள் அனைவரும் தான். 


செலவு கூடிவிட்டது? என்று செய்தி போட்ட உங்கள் எல்லாருக்கும் கேட்கிறேன் - போன மூன்று வருடங்களில் விளம்பர கட்டணத்தைக் கூட்டியது நீங்கள் தானே அய்யா. உங்களுக்குத் தானே அரசு செலவு செய்கிறது. நீங்கள் கூட்டினால் செலவும் கூடத் தானே செய்யும்! என்ன NDTV, outlook போன்ற நிறுவனகளுக்கு விளம்பரம் தருவதைக் குறைத்துக் கொண்டது அரசு. எனவே அரசை அவமானம் செய்யத் துடிக்கிறது இந்தக் கம்யூனிஸ்ட் நடத்தும் செய்தி நிறுவனங்கள். வேறு என்ன! 

இறுதியாக: 

தி இந்து, the indian express போன்ற செய்தி நிறுவனங்களை நான் கேட்கிறேன் இதே செய்தியை என்ன ஏதாவது ஆள் வைத்து நேரம் முடிவு செய்து திரும்பத் திரும்ப வெளியிடச் சொல்லி உங்கள் முதலாளி சீனாவும், உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் தலைவர்களும் கூறுகிறார்களா? 

இதே செய்தியை தான் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் தேர்தல் நேரம் NDTV வெளியிட்டது. the hindu (ஆங்கிலம்) - Hindustan Times டிசம்பர் 8ம் தேதி வெளியிட, Outlook & NDTV அதே செய்தியை 9ம் தேதி வெளியிட்டு காங்கிரஸ்க்கு தேர்தல் வேலையை நன்றாகவே பார்த்தன. இப்போது என்ன அடுத்த 2019 தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் ஆகிவிட்டதா? 

இப்போது என்ன அதே செய்தி கொஞ்சம் செலவை சேர்த்து புதிய செய்தியாக வெளியிட்டு 2019-க்கு நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயார் ஆகிறார்கள் அப்படித் தானே. கம்யூனிஸ்ட் ஊடகங்களுக்கு வெக்கமே கிடையாது எத்தனை முறை அவமானம் செய்தாலும். கொஞ்சமாவது அசிங்கம் அவமானம் என்று சிந்திக்கவும். 

இந்தச் செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனங்களை நான் கேட்கிறேன்: 

எந்த எந்த டி.வி-க்கு, செய்தி நிறுவனத்திற்கு, ரேடியோவிற்கு - என்ன என்ன அரசு திட்டங்களுக்கு, அரசு எவ்வளவு விளம்பரம் வெளியிட்டது என்றும் அதன் மூலம் செய்தி நிறுவனங்கள் எவ்வளவு லாபம் வருமானம் அடைந்தீர் என்றும் முழு விவரத்தை வெளியிடத் திராணி உண்டா? 

இங்கே ஊடக சுதந்திரம் என்று கூறிக் கொண்டு தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்கள் அனைத்துச் செய்தி ஊடக முதலாளிகளும். இவர்கள் 1% கூடச் செய்தி வெளியிட விருப்பம் இல்லை. எப்படிச் செய்தியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவை இவர்கள் எடுத்து அதற்குத் தக்க செய்திகளைத் தலைப்பு கொடுத்து - செய்தியை மறைத்துத் திரித்து மக்களை ஆட்டு மந்தைகள் போல நடத்த விருப்புகிறார்கள். 

-மாரிதாஸ்

கட்டுரையாளர் பதிவை, அவரது அனுமதியுடன் நமது தளத்தில் வெளியிட்டுள்ளோம். இதில் உள்ளக் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளருடையதே.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.