கர்நாடக நாடகத்துக்கு நடுவே தேவகவுடாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 06:39 pm

கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே பிரதமர்மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

கர்நாடக தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து பெரும்பான்மை இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் ஆளுநர் எடியூரப்பாவை ஆளுநராக நியமனம் செய்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.

இந்நிலையில் தேவகவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடனும் வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்'' எனக்கூறியுள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.