காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; வீரர் ஒருவர், பொதுமக்கள் 4 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 01:20 pm


காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் மரணமடைந்தார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், பொதுமக்களில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர்கள் சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதேபோன்று அர்னியா பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  இதனையடுத்து இன்றைய தாக்குதலில் மட்டும் பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில். சர்வதேச எல்லையின் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஜம்மு-காஷ்மீரில் எவ்வித தாக்குதலும் நடத்த வேண்டாம் என காஷ்மீர் அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலை தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close