டெல்லியில் கொடூரம்: சொத்து தகராறில் நடுரோட்டில் பெண் அடித்துக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 03:09 pm


டெல்லியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் பெண் ஒருவரை அவரது உறவினர்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் ஜகாட்புரி பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் , அவரது கணவர், அவரது இரண்டு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மே 14ம் தேதி அந்த பெண்ணை அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரரின் மகன்கள் சேர்ந்து சாலையில் வைத்து அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். கையில் கிடைத்த மட்டையால் தொடர்ந்து தாக்கியதில் அந்த பெண்ணை அங்குள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டுசென்ற சில நிமிடங்களில் அந்த பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெண்ணை உறவினர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close