முதல்வர் பதவிக்கு போட்டி- உச்சநீதிமன்றத்தில் காமெடியான காரசார விவாதம்

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 06:35 pm


பரபரப்பான அரசியல் களத்திற்கு இடையே உச்சநீதிமன்றத்தில் ஒரு சுவாரஸ்ய காமெடி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இரவோடு இரவாக உச்சநீதிமன்றத்தை கூட்டி ஆளுநரின் சப்போர்ட்டில் ஒரு இரவில் முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பாவிற்கு எதிராக தொடர்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஒருவழியாக இந்த வழக்கில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கில் காங்கிரஸ்- மஜத கட்சியின் சார்பில் அபிஷேக் மனு சிங்வி மற்றும் கபில் சிபில், பாஜக சார்பில் முகுல் ரோஹத்கி ஆஜராகி காரசாரமாக விவாதம் நடத்தினர்.

அதற்கு பதில் கொடுக்கும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூ‌ஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு, பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் பேரவையே தவிர உச்சநீதிமன்றம் இல்லை என தங்களது தரப்பில் அனல்பறக்கவிட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நாங்கள் ரெடி என காங்கிரஸ் கூற, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எங்களுக்கு அவகாசம் வேண்டும் என பாஜக கூற பரப்பரபாக சென்றது வாதம். இந்த காரசாரமான விவாதத்திற்கு நடுவில் நீதிபதி சுவாரஸ்யமான காமெடி வாதமும் அரங்கேறியுள்ளது.

பாஜக எங்களிடம் 114 தொகுதி எம்.எல்.ஏக்களின் ஆதரவு என கூற, மஜத- காங்கிரஸ் எங்களிட,ம் 115  எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கு என மாறி மாறி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி, “ஹலோ இது ராஜ் பவனா? என்னிடம் 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். என்னை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வையுங்கள்... நான் தான்  எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டின் முதலாளி” என காமெடி சொல்லி நீதிமன்றத்தில் இருந்தவர்களை கலக் என சிரிக்க வைத்தார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.