• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

கொரியர் டெலிவரி செய்ய களமிறங்கிய டப்பாவாலாக்கள்!!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 19 May, 2018 06:49 am


மும்பை முழுவதும் டப்பாவாலக்கள் கொரியர் மற்றும் பார்சல் வரும் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் பணியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மும்பையில் தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்களின் வீட்டிலிருந்து மதிய உணவை சூடாக டட்டாவில் வைத்து வினிநோகம் செய்து வருகின்றனர். இப்படி மதிய உணவை டப்பாவில் வைத்துக்கொண்டு தெரு தெருவாக திரியும் விநியோகஸ்தர்கள் தான்  “டப்பாவாலாக்கள்” என அழைக்கப்படுகிறது. சுமார்  5000 டப்பாவாலாக்கள் தினமும் 2 லட்சம் டிப்பன் பாக்ஸ்களை பணியாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் டெலிவரி வேலையில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டப்பாவாலாக்கள் டிப்பன் பாக்ஸ்களை மட்டுமின்று கொரியர் மற்றும் பார்சலை டெலிவரி செய்யும் வேலையிலும், ஈடுபட இருப்பதாக டப்பாவாலாக்களின் தலைவர் சுபாஷ் தாலேகார் தெரிவித்துள்ளார்.

Advertisement:
[X] Close