கர்நாடக சட்டப்பேரவையில் 193 எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 02:17 pm


கர்நாடக சட்டப்பேரவையில் இன்று 193 எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுள்ளனர். 

கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆளுநர் அழைப்புக்கு ஏற்ப எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்றார். இதனை எதிர்த்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.அதற்கு முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்கவும், தாற்காலிகமாக ஒரு சபாநாயகரை நியமிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.கவின் மூத்த எம்.எல்.ஏ. கே.ஜி. போபையா நியமிக்கப்பட்டார். 

இதையடுத்து இன்று காலை பா.ஜ.க, காங்கிரஸ், ம.ஜ.த, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். சரியாக 11 மணி அளவில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. சபாநாயகர் போபையா அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல் நபராக எடியூரப்பா எம்.எல்.ஏ வாக பதவியேற்றுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து காங்கிரஸின் சித்தராமையா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். தொடர்ந்து குமாரசுவாமி உள்ளிட்ட மற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். 

இன்று சட்டப்பேரவைக்கு ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகிய 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வரவில்லை என முதலில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரதாப் கவுடா பேரவைக்கு வந்தார். 

இறுதியாக 193 பேர் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து உணவு இடைவேளைக்காக 3.30 மணி வரை சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close