கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா?

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 02:23 pm


கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக கன்னட ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை தடுப்பதற்காகவே எடியூரப்பா இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெரும்பான்மையை நிரூபிக்க போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லை என்பதும் இங்கு முக்கிய காரணமாகவும் முன்வைக்கப்படுகிறது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் குதிரைப் பேரத்தில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக பல்வேறு ஆதாரங்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் கர்நாடகா அரசியல் சூழலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்பொருட்டு இன்று காலை எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் 193 எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுள்ளனர்.  மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close