• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

எடியூரப்பாவே குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளாரா?...வைரலாகும் ஆடியோ!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 02:44 pm


கர்நாடகாவில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடை பெற உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.எல்,ஏ பி.சி பாட்டிலுடன், எடியூரப்பாவே குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க ஆளுநர் அழைப்பின் பேரில் ஆட்சியமைத்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப  இன்று மாலை 4மணி அளவில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 104 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க, மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் பேரம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.சி. பாட்டிலீடம், எடியூரப்பா பேசிய ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. அதில் எடியூரப்பா, பி.சி. பாட்டிலீடம், "நீங்கள் காங்கிரஸ் பிடியில் இருந்து வந்துவிடுங்கள். நான் உங்களுக்கு அமைச்சர் பதவி தருகிறேன். அத்துடன் உங்களுக்கு தேவையான பணமும் தருகிறேன்" என்று பேசியுள்ளார். இந்த ஆடியோவில் இருப்பது எடியூரப்பாவின் குரல் தான் என்பதும் உறுதியாக தெரிகிறது. ஏற்கனவே இரண்டு ஆடியோக்கள் வெளியான நிலையில், எடியூரப்பா பேசிய இந்த வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
[X] Close