எடியூரப்பா ராஜினாமா; நீதித்துறைக்கு நன்றி - குலாம் நபி ஆசாத்

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 04:50 pm


கர்நாடக அரசியல் விவகாரத்தை சிறப்பாக கையாண்ட நீதித்துறைக்கு நன்றி என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே தனக்கு பெரும்பான்மை இல்லை எனக்கூறி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

இதையடுத்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “கர்நாடக அரசியல் விவகாரத்தை சிறப்பாக கையாண்ட நீதித்துறைக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  எடியூரப்பா பதவி விலகியதால் காங். - ம.ஜ.த கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்வராக பதவியேற்பார். பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லை என்று ஆளுநருக்கு நன்றாகத் தெரியும். பணம், பதவி ஆசையை காட்டி எங்கள் எம்.எல்.ஏக்களை வாங்க முற்பட்டனர். எடியூரப்பா பதவி விலகியது சட்டம், அரசியலமைப்பு, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. காங்கிரஸ்- ம.ஜ.த கூட்டணியை உடைக்க ஆளுநர் 2 வாரம் அவகாசம் வழங்கியிருந்தார்” எனக் கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close