தொடர்ந்து பாஜகவை வீழ்த்துவோம்- ராகுல் காந்தி சூளுரை

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 05:50 pm


ஒற்றுமையோடு எதிர்க்கட்சியினர் பாஜகவை வீழ்த்தியது பெருமையாக உள்ளது; தொடர்ந்து பாஜகவை வீழ்த்துவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நீருபிக்க முடியாததால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே தனது ராஜினாமா பதவியில் இருந்து எடியூரப்பா பதவி விலகினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “கர்நாடக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை எந்த மாநிலத்திலும் பாஜக மதிப்பதில்லை. எம்எல்ஏக்களை மோடி பேரம் பேச முயன்றது பேரவையில் அப்பட்டமானது. நாட்டில் ஊழலை ஒழிக்க போராடுவதாக மோடி கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய், அவரே ஒரு ஊழல்வாதி தான். ஒற்றுமையோடு எதிர்க்கட்சியினர் பாஜகவை வீழ்த்தியது பெருமையாக உள்ளது. தொடர்ந்து பாஜகவை வீழ்த்துவோம்” என கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close