எடியூரப்பாவை வீழ்த்திய வேங்கை மகன் இவர்தான்!!

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 12:07 am


நொடிக்கு நொடி பரப்பரப்பு மாற்றங்களுடன் பயணித்த கர்“நாடக” அரசியல் எபிசோட் வெற்றிகரமாக இன்று நிறைவடைந்தது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவக்குமார். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைப்பேன் என காலையில் தைரியமாக கூறிய எடியூரப்பா, மாலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே கண்ணீருடன் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு விடைப்பெற்றார். இந்த திடீர் மாற்றத்துக்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர் கர்நாடகத்தில் மின் துறை அமைச்சராக இருந்த டி.கே. சிவக்குமார்.

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் கூட்டணி ஆட்சி என்ற ‘திட்டம்-பி’ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோன்று கர்நாடக தேர்தலில் தனி பெரும்பான்மையுன் ஆட்சியமைக்க காங்கிரஸ்க்கு தகுதி இல்லாமல் போனது. எனவே திட்டமிட்டிருந்தபடியே மஜதவுடன் கூட்டணி அமைக்கும் நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது. முதலமைச்சர் பதவியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என மஜதவுடன் டீல் பேசிய காங்கிரஸ், இரண்டு கட்சி எம்.எல்.ஏக்களையும் தன்னுடைய கண்பார்வையில் கொண்டுவந்து பத்திரப்படுத்தியது. இந்த முழு பொறுப்பும் சிவக்குமாரை நம்பி ஒப்படைக்கப்பட்டது.


அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் வழிநடத்திய சிவக்குமார், எம்.எல்.ஏக்களின் செல்போன்களை அணைத்து வைத்து, அவர்கள் வீட்டில் பயப்பட வேண்டாம் என செய்தியை அனுப்பிவிட்டு மாஸ்டர் பிளான் செய்துள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பணம், பதவிக்கு ஆசைப்பட்டு அடிமையாகிவிடக்கூடாது. பா.ஜ.க-விடம் இருந்து அழைப்புகள் வந்தால் பதிவு செய்யுங்கள் என அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் டிப்ஸ் கொடுத்துள்ளார் சிவக்குமார்.

கர்“நாடக”மேடையில் அடுத்த ட்விஸ்ட் இன்னும் சுவாரஸ்யமானது. அதாவது, பாஜகவின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி, எம்.எல்.ஏக்களை கொச்சி அழைத்து செல்வதாக விமான டிக்கெட்கள் எல்லாம் முன்பதிவு செய்துவிட்டு, ஹைதராபாத் அழைத்து சென்றுள்ளார். இவ்வளவு உஷார இருந்தும் இரண்டு எம்.எல்.ஏக்களை பறிக்கொடுத்த சிவக்குமார், பா.ஜ.க-வின் பிடியில் இருந்த ஆனந்த்சிங், பிரதாப்கவுடா பாட்டில் ஆகிய இருவரையும் டெல்லிவரை சென்று ட்ராக் செய்து பேரவைக்கு கொண்டுவந்தார்.

மேற்கண்ட அனைத்தையும் தனது சகோதரனின் உதவியுடன் செய்துவிட்டு பேரவையில் அமர்ந்து சிரித்தபடி எடியூரப்பாவின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தார் சிவக்குமார்.


இவ்வளவு சூழ்ச்சிகளை செய்து எம்.எல்.ஏக்களை பாதுகாத்து எடியூரப்பாவை தானாகவே ராஜினாமா செய்ய வைத்த பெருமை வேங்கை மகன் சிவக்குமாரையே சேரும். இதனால் குமாரசாமி அடுத்ததாக முதலமைச்சராக பொறுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொழுது, சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கர்நாடக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. தனது 25 வயதில் அரசியல் களத்தில் இறங்கி தேவகவுடாவுடன் போட்டியிட்டி தனது 30 வயதில் அமைச்சராக ஜொலித்த சிவக்குமார் உண்மையான வேங்கை மகன் என்பதில் சந்தேகமே இல்லை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close