ஒன்று கூடும் பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகள்: 23ந்தேதி முதல்வராகிறார் குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 11:02 am

கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமியை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 23ந்தேதி நடக்கவிருக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மம்தா உட்பட பா.ஜ.க எதிர்ப்பு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகளுக்கு பிறகான திருப்பங்கள்:

கர்நாடக தேர்தல் கடந்த 12ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை  முன்னரே அறிவித்து இருந்தது போல கடந்த 15ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் காங்கிரஸ், ம.ஜ.த கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணியில் பெரும்பான்மை கிடைத்தால் முதல்வர் பதவியை குமாரசாமியே ஏற்கலாம் என்றும் தெரிவித்தது. வாக்குபதவி முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு கடிதம் கொடுத்தது. 

பின்னர் தனி பெரும்கட்சியாக உள்ள தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு பா.ஜ.கவின் எடியூரப்பா ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். அதன் பின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்த வஜுபாய் வாலா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். 

இதனை எதிர்த்து காங்கிரஸ்- ம.ஜ.த கூட்டணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை நள்ளிரவில் விசாரித்த நீதிபதிகள் ஆளுநர் முடிவில் குறிக்கிட முடியாது என்று உத்தரவிட்டது. மேலும் ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு எடியூரப்பா ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தை கோர்டில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டு அடுத்த நாளுக்கு வழக்கை ஒத்திவைத்தது. 

அன்றையே தினமே எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அடுத்த நாள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 19ந்தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தபட வேண்டும் என்று பல விதிமுறைகளுடன் உத்தரவிட்டது நீதிமன்றம் அதன்படி நேற்று எம.எல்.ஏக்கள் பதிவியேற்புக்கு பின் மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டமன்றம் கூடியது. அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார். உரையின் முடிவில் பெரும்பான்மை இல்லாததால் பதவி விலகி கொள்வதாக அவர் கூறினார். 

முதல்வராகும் குமாரசாமி:

இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர்களும் சென்று, ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க எங்களை அழைக்கும்படி ஆளுநரிடம் கடந்த 15ம் தேதி கடிதம் அளித்திருந்தோம். அதையேற்று, "எங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். பெங்களூரு கண்டீருவா மைதானத்தில் வரும் 23ம் தேதி, புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது" என்றார்.

முன்னதாக, வரும் 21ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என அவர் தெரிவித்திருந்தார். அதன்பிறகு, 23ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என குமாரசாமி குறிப்பிட்டார்.

ராஜீவ் நினைவு தினத்தால் தேதி மாற்றம்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதிதான் படுகொலை செய்யப்பட்டார் என்பதால், பதவியேற்பு நாளை மே 23ம் தேதிக்கு மாற்றிக் கொண்டதாக குமாரசாமி கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை வரும் 21ம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.

பா.ஜ.க எதிர்ப்பு தலைவர்களுக்கு அழைப்பு: 

பதவியேற்பு விழாவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, அனைத்துப் பிராந்திய முதல்வர்களையும், ஆந்திரா, மேற்கு வங்கம், தெலங்கானா முதல்வர்களையும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளன. எனவே இந்த நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close