பண மழையில் நாட்டுபுற பாடகர்கள்: ரூ.50 லட்சம் வசூல்

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 02:27 pm

பக்தி பாடல்கள் பாடிய நாட்டுபுற பாடகர்களுக்கு குஜராத் கிராமத்து மக்கள் ரூ50 லட்சத்தை வாரி வழங்கியுள்ளனர். 

குஜராத் மாநிலம் வலசாத் மாவட்டத்தில் உள்ளது கல்வடா கிராமம். இந்த கிராமத்தின் தலைவர் ஆஷிஷ் படேல் என்பவர், தங்கள் கிராமத்திற்கென தனி ஒரு ஆம்புலன்ஸ் வாங்க நிதி திரட்ட விரும்பினார்.

அந்த வகையில், புகழ்பெற்ற நாட்டுபுற பாடகரை கொண்டு அக்கிராமத்தில் இசை நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் சேரும் பணத்தினை கொண்டு ஜலராம் மானவ் சேவா சங்கத்திற்கு நிதி திரட்டவும், அப்பணத்தினை கொண்டு ஆம்புலன்ஸ் வாங்கவும் முடிவு செய்தார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பாடல் பாடிய பாடகர்களுக்கு அப்பகுதி மக்கள், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாரி இறைத்தனர். இதன் மூலம் நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close