• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

100 கோடி இந்தியர்கள் ரத்தத்திலும் ஊழல் ஓடுகிறது - உ.பி அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Last Modified : 20 May, 2018 06:29 pm

நாட்டில் உள்ள 100 கோடி மக்களின் ரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்திர பிரதேச மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியுள்ளார். 

உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று டாக்டர். சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கலந்து கொண்டனர்.

அப்போது வாரணாசியில் சமீபத்தில் ஏற்பட்ட மேம்பால விபத்து குறித்து பேசிய ஓம் பிரகாஷ், "நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது. அதை அகற்றுவது எளிதான காரியம் அல்ல. சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயங்களில், ஆந்திரா, கேரளாவை விட நமது மாநிலம் சிறப்பாகவே திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதியநாத்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை" என தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என ஓம் பிரகாஷ் பா.ஜ.க.வை தாக்கிப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close