அக்.2ல் ரயில்களில் அசைவ உணவுக்கு தடை

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 06:30 pm


தேசப்பிதா மகாத்மா காந்தியை நினைவு கூறும் விதமாக அக்டோபர் 2ம் தேதி ரயில்களில் அசைவ உணவு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் வரும் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்த ஆண்டும் அடுத்த 2 ஆண்டுகளும் அக்டோபர் 2ம் தேதியன்று சைவ உணவு தினமாக கடைபிடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தவிர சிறப்பு ரயில்களை இயக்கவும் காந்தியின் படத்துடன் கூடிய டிக்கெட்டுகளை வெளியிடவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால் ரயில்களில் அக். 2ம் தேதி அசைவ உணவுகள் வழங்கப்படமாட்டாது. இது குறித்த பரிந்துரையை ரயில்வே வாரியம் மத்திய கலாச்சார அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது.  மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் காந்தி தொடர்பான படங்களை வரையவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு மத்திய கலாச்சாரத்துறை ஒப்புதல் கிடைக்க வேண்டியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரயில் நீரை இலவசாமக பெற்றுவருகின்றனர். இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இனி ரயில் நீர் இலவசமாக வழங்கப்படாது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close