மாணவர்களிடையே அதிகரித்துவரும் ஸ்மார்ட்போன் மோகம்- அதிர்ச்சி தகவல்

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 08:33 pm


இந்தியாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரு நாளில் 150 முறை தங்கள் ஸ்மார்ட் ஃபோனை எடுத்து பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஸ்மார்ட்போன் இன்றைய இளைஞர்களின் கவச குண்டலமாகிவிட்டது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைத்து நடத்திய ஆய்வில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரு நாளில் 150 முறை தங்கள் ஸ்மார்ட் ஃபோனை எடுத்து பார்ப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள 20 பல்கலைக்கழகங்களில் தலா 200 மாணவ, மாணவிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. செல்ஃபோன் நினைவாகவே இருப்பதால் ஆரோக்கியமும் கல்வித்திறனும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. 


ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 26% பேரே அதை அழைப்புகள் மேற்கொள்ள பெரும்பாலும் பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தனர். 63% பேர் தினமும் 4 முதல் 7 மணி நேரம் வரை ஸ்மார்ட்ஃபோனில் ஆழ்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 23% பேர் 8 மணி நேரத்திற்கு அதிகமாக ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close