மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி

Last Modified : 20 May, 2018 05:06 pm


சத்தீஸ்கரின் டான்டெவாடா பகுதியில், பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

பச்சேலி - சோல்னார் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், பாதுகாப்புப் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, திடீரென மர்ம நபர்கள் சிலர், ராணுவ வாகனத்தின் மீது வெடிகுண்டை வீசினர். 7 பேர் பயணித்த நிலையில்,5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மற்றொருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதலை நடத்தியது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்றும், அவர்கள் பயன்படுத்தியது, வீட்டிலேயே செய்யப்பட்ட வெடிகுண்டு என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close