மோடியை தவறாக வழிநடத்தியோரை நீக்க வேண்டும்- சத்ருகன் சின்ஹா

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 10:04 pm


கர்நாடக விவகாரத்தில் தவறான தகவல்களை அளித்து பிரதமரை தவறாக வழிநடத்தியவர்களை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என அக்கட்சி எம்பியும் பிரபல நடிகருமான சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பாஜக வேட்பாளரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். இதையடுத்து கர்நாடக அரசியலில் நொடிக்கு நொடிக்கு பல அரசியல் திருப்பங்கள் அரங்கேறின. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பானமையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, போதிய பெரும்பான்மை இல்லாததால் கர்நாடகா சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “ கர்நாடக விவகாரத்தில் தவறான தகவல்களை அளித்து பிரதமரை தவறாக வழிநடத்தியவர்களை கட்சியை விட்டே நீக்க வேண்டும். எடியூரப்பா ராஜினாமா செய்தது கட்சிக்கு மிகப்பெரிய தலைகுனிவு. ஆட்சியை கைப்பற்றிய குமாரசாமி, சித்தராமையாவிற்கு பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close