இந்திய ராணுவத்திடம் கெஞ்சும் பாகிஸ்தான் ராணுவம்!!

  Sujatha   | Last Modified : 21 May, 2018 06:56 am


இந்திய எல்லை  பாதுகாப்பு படை அதிகாரிகளை நேற்று  தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் ராணுவம்,  உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் 19 வினாடி வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லைப்பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 18 உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர்.   மேலும் நடப்பு ஆண்டில் மட்டும்  பாகிஸ்தான் ராணுவம் 700 முறை இந்த கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், ஆத்திரமடைந்த  இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடியை கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம்,  உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close