மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த தேவகவுடா!

  Sujatha   | Last Modified : 21 May, 2018 07:34 am


குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக செயல்  தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார். 

கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே ராஜினாமா செய்து விட்டார். இதனை தொடர்ந்து கவர்னர் வாஜுபாய் வாலா, ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க குமாரசாமிக்கு  மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கால அவகாசம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (திங்கள் கிழமை) ராஜீவ் காந்தி நினைவு நாள் என்பதால் வரும் புதன்கிழமை (23-5-2018)  கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்க முடிவு செய்துள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பாஜகவுக்கு எதிரான தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி,சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், மாயாவதி   ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்த பதவியேற்பு விழாவை பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்கும் ஒரு வாய்ப்பாகவும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close