மாட்டிறைச்சியால் வன்முறை: ஒருவர் பலி, படுகாயமடைந்தவர் மீது வழக்கு!

Last Modified : 21 May, 2018 08:44 am


மத்திய பிரதேசத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கிளம்பிய சர்ச்சையை தொடர்ந்து, ஒரு கும்பல் இரண்டு பேரை கடுமையாக தாக்கியது இதில் ஒருவர் பலியானார்.

சிலர் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக மத்திய பிரதேசத்தின் சத்னா பகுதியில் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து, கோபமடைந்த ஒரு கும்பல், இஸ்லாமியர்கள் இரண்டு பேரை வழி மறித்து கடுமையாக தாக்கினர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார், ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் அங்கு விரைந்து, வன்முறை செய்த கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து, கிடைத்த எலும்பு மற்றும் கறி துண்டுகளை சோதனைக்கு அனுப்பியதாகவும் அதில் அவை மாட்டிறைச்சி தான் என உறுதி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் மீது பசுவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close