கர்நாடகாவில் யார் யாருக்கு அமைச்சர் பதவி? இன்று சோனியாவை சந்திக்கிறார் குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 10:49 pm

கர்நாடகாவில் புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் யாருக்கு எந்தப் பதவி என்பது குறித்து இன்று சோனியா காந்தியுடன் குமாரசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் குழப்பங்களுக்கு பிறகு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் உட்பட பா.ஜ.க எதிர்ப்பு கட்சி தலைவர்கள்  அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளே சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று டெல்லி செல்லும் குமாரசாமி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களை சந்தித்து அமைச்சரவையில் யாருக்கு எந்த பதவியை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.

டெல்லிக்கு வரவேண்டாம்: ராகுல்

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் டெல்லிக்கு வர வேண்டாம் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். டெல்லிக்கு வரும் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி கேட்டு வற்புறுத்தலாம் என்பதாலும், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.க்களை வருகிற 24ந் தேதி வரை பாதுகாக்க வேண்டி இருப்பதாலும், டெல்லிக்கு வர காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர், சாமனூர் சிவசங்கரப்பா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே துணை முதல்வர் பதவிக்காக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேருக்கு அந்த பதவியை வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close