கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல்; 10 பேர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 12:11 pm


கேரளாவில் 'நிபா' வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் சிலர் கடந்த சில நாட்களாக தீராத காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவர்களுக்கு நிபா(NiV) வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கியவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் மாதிரிகளை கொண்டு சோதனை நடத்தப்பட்டும் வருகிறது. 

இந்த நிபா வைரஸ்முதல்முதலாக 1998ம் ஆண்டு மலேசியாவில் ஏற்பட்டது. அந்த கிராமத்தின் பெயரான 'நிபா' என்பதையே இந்த நோய்க்கு பெயர் வைத்துள்ளனர். பழங்களைத் தின்னும் வௌவால்களின் சிறுநீர் மற்றும் மலம் மூலமாக இந்த நோய் பரவுகிறது. வௌவால்கள் கடித்த அந்த பழங்களை மனிதன் சாப்பிடும் போது இந்த நோய் பரவுகிறது. தற்போது கேரளாவில் இந்த நோய் தாக்கப்பட்டுள்ளதை கேரள சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதனை தடுக்கவும், இந்த நோய் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமை படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை மறுத்தும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close