தந்தை நினைவு தினத்தில் ராகுலின் உருக்கமான ட்விட்

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 12:16 pm

தனது தந்தை நினைவு தினத்தில் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் தனது தந்தையின் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அதில், ''வெறுப்புணர்வு ஒருவர் சுமந்து செல்லம் சிறை என்று எனது தந்தை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். இதனை எனக்கு போதித்த அவருக்க அவரது நினைவு தினத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற விலை மதிக்க முடியாத சிந்தனைகளை  பரிசாக மகனுக்கு எனது தந்தை வழங்கியுள்ளார். உங்களை  விரும்பும் அனைவரும் உங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்திருப்போம்" என உருக்கமாக  பதிவிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close